வியாழன், 30 செப்டம்பர், 2010

பர்தா அடிமைத்தனமா?

Posted on 10:52 AM by இப்னு இஸ்மாயில்

மங்கையின்
மறைந்திருக்கும் அவயங்களை
முறைத்துப் பார்த்துச் செல்லும்
உலகம் திறந்துக்காட்டச் சொல்லும்!

இழுத்துப்போர்த்தி நடந்துச்சென்றால்
அடிப்படைவாதி என்றேச் சொல்லும்;
அடிமைசாசனம் செய்யும்!

சமத்துவம் சொல்லும்
பள்ளியிலே மதத்துவேசம் நடக்கும்;
எதிர்த்து நின்றுக் குரல் கொடுத்தால்
இல்லையென்றே நடிக்கும்!

அவிழ்த்துப் பார்க்க
ஆசைப்படும் அவல
நிலையைப்பாருங்கள்!
என் பிள்ளைப் போர்த்திச் சென்றால்
இவனுக்கென்ன கேளுங்கள்!

அழகைக் காட்டிச் சென்றால்
உச்” கொட்டும் உலகம்;
ஒரு நாள்
இச்கொட்டத் துணியும்;
பெண்மை புகழ் காக்க
புர்க்கா உண்டு தாமதிக்காதீர்கள் இனியும்!

குறையேதுமில்லை
திரையிட்டு வந்தேன்;
உன் இச்சைக்கொண்ட
பார்வைக்கு எச்சில் துப்பி
எதிர்ப்பேன்!

அரைநிர்வாணம்
அழகாய் தோன்றும் உனக்கு;
உன் அக்காள் தங்கை
திறந்து வந்தால்
முழுக்கோபம் எதற்கு!

மாற்றான் தோட்டத்து
மல்லிகை மட்டும்
மணக்கவேண்டும் உனக்கு;
மானங்கெட்ட மானிடனே
மனைவியை  
பூட்டிவைக்கிறாய் எதற்கு!

போர்த்தியிருக்கும் எங்களை
கழட்டச் சொல்லி கேட்கிறாய்;
கழட்டி வந்த பெண்களிடம்
கைவரிசையைக் காட்டுகிறாய்!

மானம் காக்க
மறைத்திருப்பது
சிறையென்று நீ நினைத்தால்;
ஒத்துக்கொள்கிறேன்
ஒளிந்திருக்கிறேன்
உனக்காகத்தான்;
தப்பிப்பதற்கு!

யாசர் அரபாத் கவிதை தொகுப்பிலிருந்து 

7 Response to "பர்தா அடிமைத்தனமா?"

.
gravatar
இப்னு இஸ்மாயில் Says....

மிட்டாய் போட்டோ சூப்பர்

.
gravatar
THIRUBUVANAM Says....

வருகைக்கும் கருத்துக்கும்
நன்றி -

.
gravatar
THIRUBUVANAM Says....

வருகைக்கும் கருத்துக்கும்
நன்றி -

.
gravatar
THIRUBUVANAM Says....

வருகைக்கும் கருத்துக்கும்
நன்றி -

.
gravatar
sun Says....

கேள்வியை நீங்களே கேட்டு தலைப்பு வைத்துவிட்டு அதற்கான பதில் இல்லாமல் வெறுமனே கவிதையை போட்டு இருக்கீங்க

Leave A Reply